Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பழங்குடியினக் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் கடந்த காலங்களில் பழங்குடியினக் (Indigenous) குழந்தைகளுக்கு எதிராகக் குடியிருப்புப் பாடசாலைகளில் இழைக்கப்பட்ட கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் கலாசார இனப்படுகொலை (Cultural Genocide) குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 சர்வதேச நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ (PPT) இந்த உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்தவுள்ளது.

இத்தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வுகள் மற்றும் சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மொன்றியல் நகரில் ஆரம்பமாகவுள்ளதாக, தற்பொழுது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேசத் தீர்ப்பாயம் குறித்து மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கியூபெக் பிராந்தியத்தின் பழங்குடியினப் பெண் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான மிஷேல் ரோபிடாஸ் (Michèle Rouleau) உணர்ச்சிப் பூர்வமாக தமது கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.

”கனேடிய நீதிமன்றங்கள் மற்றும் உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை எமது மக்கள் இழந்துவிட்ட சூழலில், இந்தச் சர்வதேசத் தீர்ப்பாயம் உலக நாடுகளுக்கு முன்னிலையில் உண்மையை உரக்கச் சொல்வதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தளமாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தாலியின் ரோம் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சர்வதேசத் தீர்ப்பாயம், கனடிய வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயமாகக் கருதப்படும் பழங்குடியினச் சிறுவர்களின் மரணங்கள் மற்றும் கட்டாயக் கலாசார மாற்றங்கள் குறித்துப் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் சுயாதீனப் புலனாய்வை மேற்கொள்ளவுள்ளது.

முந்தைய செய்தி பழங்குடி மக்களின் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் – ஆளுநர் மேரி சைமன்
அடுத்த செய்தி பலாலி கிழக்கு முதற்கட்டமாக விடுவியுங்கள் – மாவட்ட செயலாளர் கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் – ட்ரம்ப்

ஜனவரி 25, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரங்கள்….

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடியர்களை வரவேற்கும் அமெரிக்க நகரம்!

ஏப்ரல் 9, 2025
கனடா

கனேடியர்களுக்கு விசா இன்றி சீனாவிற்குச் செல்ல அனுமதி

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?