Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி கிழக்கு முதற்கட்டமாக விடுவியுங்கள் – மாவட்ட செயலாளர் கோரிக்கை

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம,பிரதீபன், பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர அவர்கள் பலாலி கிழக்கில் உள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன் போதே மாவட்ட செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் . மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளையும் விடுவிக்க விடும் என மாவட்ட செயலர் விடுத்த கோரிக்கையை அடுத்து பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மாவட்ட செயலர் பிரதி அமைச்சரிடம் தெரியப்படுத்திய போது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சருடன், கடற்றொழி்ல் நீரியல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி பழங்குடியினக் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி மட்டு நகர உணவகமொன்றை 14 நாட்கள் மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சர் சந்திரசேகரை சபையில் சாடிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ….

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

அக்டோபர் 24, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து…

பிப்ரவரி 23, 2025
இலங்கை

எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?