Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ஐரோப்பாவின் நம்பகமான பொருளாதாரப் பங்காளியாகக் கியூபெக் செயல்படும் – கியூபெக் முதல்வர்

மே 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனுக்கும் கியூபெக்கின் புதிய முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு உத்தியோகபூர்வ பொருளாதார விஜயம் மேற்கொண்டுள்ள கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette), பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை (Emmanuel Macron) எலிசி அரண்மனையில் (Élysée Palace) சந்தித்துப்
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற இந்த உயர்மட்ட இராஜதந்திரச் சந்திப்பில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கனிம வள விநியோகம் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது கியூபெக்கின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் வெகுவாகப் பாராட்டினார். உலகளாவிய ஆராய்ச்சி, மூலோபாயத் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் பங்களிப்பு செய்யக்கூடிய மிகச் சிறந்த ஆற்றல் கியூபெக் மாகாணத்திற்கு இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் உறுதிசெய்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், புகழ்பெற்ற மொன்றியல் கனடியன்ஸ் (Habs) பனிஹொக்கி விளையாட்டு அணியின் உத்தியோகபூர்வ ஆடை (Jersey) ஒன்றை பிரான்ஸ் ஜனாதிபதிக்கு, ஃப்ரெச்செட் நட்புப்பரிசாக வழங்கினார்.

கியூபெக் மாகாணம் மற்றும் பிரான்ஸ் முதலானவற்றுக்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பரிசு அமைந்திருந்தது. பிரான்ஸ் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் நாட்டு வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற
வட்டமேஜை மாநாட்டில், கியூபெக்கின் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் கலந்து கொண்டார்.

அந்த மாநாட்டில் உரையாற்றிய ஃப்ரெச்செட், ”ஐரோப்பாவின் நம்பகமான பொருளாதாரப் பங்காளியாகக் கியூபெக் செயல்படும்” எனக் குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறைக்கும் நவீன மின்சார வாகனத் தயாரிப்பிற்கும் அவசியமான 28 வகையான அரிய கனிம வளங்கள் (Critical Minerals) கியூபெக்கில் இருப்பதை, அவர் பிரெஞ்சு முதலீட்டாளர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

வான்பறப்புவெளி (Aerospace) மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த முதலீடுகளைக் கியூபெக் மாகாணத்திற்கு ஈர்க்கும் நோக்கில், கிறிஸ்டின் ஃப்ரெச்செட் பிரான்ஸுக்கு மேற்கொண்டுள்ள இந்த உத்தியோகபூர்வ விஜயம் 20 ஆம் திகதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி கனடாவுடனான பல தசாப்த கால கூட்டு இராணுவக் கட்டுப்பாட்டு வாரியத்தை முடக்கியது அமெரிக்கா
அடுத்த செய்தி மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது அவசியம் – வலேரி பிளான்ட்

மார்ச் 26, 2026
கியூபெக்

மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

ஏப்ரல் 7, 2026
கியூபெக்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எக்கோல் ‘சுப்பீரியர் டி பாலே டு கியூபெக்’ (ESBQ)

பிப்ரவரி 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?