மொன்றியலில் தற்போது வேகமாக விரிவடைந்து வரும் REM ரயில் வலைப்பின்னலின் கட்டுப்பாட்டு மையமாக, இந்தப் புரோசார்ட் ‘செயல்பாட்டு நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த மையம் 24 மணிநேரமும் இயங்கும் தானியங்கி ரயில்களைக் கண்காணித்து வருகிறது.
குறிப்பாக, இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ள மேற்குத் தீவு (West Island) கிளைக்கான இறுதிக்கட்டச் சோதனைகளை இந்த மையமே ஒருங்கிணைத்து வருகிறது.
67 கிலோமீட்டர் நீளம் கொண்ட முழு ரயில் பாதையையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட இந்த மையம் ஆனது, வரும் காலங்களில் விமான நிலைய இணைப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் புரோசார்ட் நகரில் இருந்தே நிர்வகிக்கும்.
ரயில்களில் ஓட்டுநர்கள் கிடையாது என்பதால், ரயில்களின் வேகம் மற்றும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
