இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களினால் போதைபொருள் பாவனை அதிகரித்து வருவதாக அண்மையாக காலங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் புலப்படுகின்றது.
காலி ஹபராதுவ பகுதி சுற்றுலா விடுதியொன்றில் மேற்க்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், போதைபொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 280 கிராம் 150 மில்லி கிராம் கொகேன், 40 கிராம் டிஎச்ஸி , 100 கிராம் 10 மில்லி கிராம் ஹஷ் மற்றும் 10 அமெரிக்க டொலர்கள், 250 யூரோக்கள் , 17,570.00 ரூபா உள்நாட்டு பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
