Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்வு

மே 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண சட்டமன்றத்தின் (National Assembly) மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையை, 125-லிருந்து 127-ஆக உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமூலத்தை, அந்த மாகாண அரசு தாக்கல் செய்துள்ளது.

மக்கள்தொகை குறைந்து வரும் பிராந்தியங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கியூபெக் ஜனநாயக நிறுவனங்களுக்கான அமைச்சர் ஜான்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean- François Roberge) நேற்று இந்தச் சட்டமூலத்தைத் தாக்கல் செய்தார். இதன் மூலம், நீக்கப்படவிருந்த காஸ்பே (Gaspé) மற்றும் கிழக்கு மொன்றியல் ஆகிய இரண்டு தொகுதிகள் காப்பாற்றப்படவுள்ளன.

அதேவேளையில், அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்குப் புதிய இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும். 1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு, கியூபெக் மாகாணத்தில் முதன்முறையாக சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, தொகுதிகளை மறுசீரமைக்க சுயாதீன ஆணையம் எடுத்த முடிவை, கியூபெக் மாகாண அரசு தடுக்க முயன்றது. ஆனால், அவ்வாறு தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தற்போது இடங்களின் எண்ணிக்கையையே உயர்த்துவதன் மூலம், கியூபெக் அரசு புதிய தீர்வை எட்டியுள்ளது. ஆளும் CAQ கட்சி மட்டுமல்லாது, லிபரல், பார்ட்டி கியூபெக் மற்றும் கியூபெக் சொலிடேர் ஆகிய எதிர்க்கட்சிகளும் இந்த மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இரண்டு கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக (MNAs) ஆண்டுக்குச் சுமார் 2 மில்லியன் டொலர் கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் கியூபெக்கின் மக்கள்தொகை 30% அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை குறைவாக உள்ள காஸ்பே போன்ற கிராமப்புறங்களில் தொகுதிகளைக் குறைத்தால், ஒரு பிரதிநிதி கவனிக்க வேண்டிய நிலப்பரப்பு மிகப் பெரியதாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிகழுமாயின் இது அந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என, கியூபெக் அரசியல் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தச் சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றி சட்டமாக்குவதற்கு, கியூபெக் அரசு முயன்ற போதிலும், ஒரு சுயேச்சை உறுப்பினர் இடையூறு செய்தமையால், இது சாதாரண நாடாளுமன்ற நடைமுறைப்படி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத் தேர்தல் ஆனது எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தப் புதிய தொகுதிகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியல் மெட்ரோ பராமரிப்புக்கு 7 பில்லியன் டொலர் தேவை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அல்பர்ட்டா பிரிவினை விவகாரம் – டேனியல் ஸ்மித் மீது கட்சிக்குள் கடும் முரண்பாடு

மே 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மாஃபியா குழுவோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரின் இல்லத்தின் மீது நடத்த திட்டமிட்ட தீவைப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

மே 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிமழை (Ice Storm) காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொன்றியல் நகரம்

மார்ச் 12, 2026

ஒன்டாரியோவில் பணிபுரிய அனுமதி கோரும் கியூபெக் மருத்துவர்கள்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?