Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தின நிகழ்வு

மே 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தமிழினப் படுகொலை நாளான மே 18 ஆம் திகதியை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூவனிட்டா நாதன் ஆகியோரினால் ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தில் மே மாதம் ஐந்தாம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலியுடன் இந்த நிகழ்வு இனிதே ஆரம்பமானது. இந் நிகழ்வில் உரையாற்றிய கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் “தமிழ் மக்களின் உரிமை தமிழ் மொழியின் உரிமை, சுயநிர்ணய உரிமை மற்றும் எமது நிலம் மற்றும் கலாசார உரிமைகளுக்காக பல தசாப்தங்களாகத் தமது உயிரைத் தியாகம் செய்தவர்களின் உறுதிப்பாடுதான் மிக முக்கியமானது.

2009ஆம் ஆண்டின் பின்னர் இந்த அறையில் கூடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய பாதையில் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றனர். பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான பயணம் என்பது இன்னும் முடியவில்லை. அது தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படவேண்டியது”எனத் தெரிவித்தார்.

அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையூடனும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவூம் கரி ஆனந்தசங்கரி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

2022ஆம் ஆண்டு கனேடிய நாடாளுமன்றத்தில் மே 18 ஆம் திகதியை தமிழினப் படுகொலையாக பிரகடனம் செய்யப்பட்டமையும் இலங்கை அரசத் தலைவர்கள் மீதான தடை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான மைய குழுவில் கனடாவின் தொடர்ச்சியான பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொன்ரியல் நகரசபை உறுப்பினரான மிலானி தியாகராஜா இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றியிருந்தார். மே 18ஆம் திகதி நினைவூகூரல் என்பது தமிழர் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஒரு துயர் மிகுந்த அத்தியாயம் எனவும் கனடாவில் உள்ள தமிழர்களுக்கு இது ஒரு நெருக்கமான வரலாறு எனவும் எமது குடும்பங்களிலும் கதைகளிலும் அது நிறைந்திருக்கின்றது எனவும் நினைவூகளில் துயரமாகவும் போராட்டத்தின் அடையாளமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னட் ஜீனஸ் தமிழ் உரிமைகளுக்கான தொடர்ந்தும் குரல் கொடுப்பதற்கான உறுதிப்பாட்டை அளிப்பதாக தெரிவித்தார். மேலும்  இனப்படுகொலைக்குள்ளான இனமொன்றினைச் சேர்ந்தவராக தன்னால் இந்த நீதிக்கான பயணத்தை புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கார்ல்டன் மற்றும் ஒட்டாவா பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கான நீதிக்கான பயணம் தொடரும் என தெரிவித்தனர்.

இந்த நிகழ்வினை நிறைவு செய்யும் வகையில் உரையாற்றிய ஜூவனிட்டா நாதன் அவர்கள் தமிழினப் படுகொலை நினைவு நாளின் முக்கியத்துவத்தை வலியூறுத்தியதுடன் நீதியை நோக்கிய பயணத்தில் கனடாவின் தொடர்ச்சியான பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

முந்தைய செய்தி மட்டு நகர் வாவியில் சடலமாக மீட்க்கப்பட்ட இரு ஆண்கள் – பெரும் பரபரப்பு
அடுத்த செய்தி தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் விரிவான திட்டம் வெளியீடு ….

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

98% வணிகங்களில் பிரெஞ்சு மொழி சேவை: மொன்றியல் மொழிச் சட்டம் வெற்றிகரமாக அமுல்!

மே 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் 33-வது முதல்வராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் பதவியேற்றுக் கொண்டார்.

ஏப்ரல் 15, 2026
கனடாமுதன்மை செய்தி

ரென்ஃப்ரூவில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?