Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா–அமெரிக்க வர்த்தக பதற்றம்: புதிய குழு உருவாக்கம்.

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் பால் உற்பத்தித் துறை (Dairy) மற்றும் கனிமவளத் (Critical Minerals) துறைகளை அமெரிக்காவின் வர்த்தகத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காகவே புதிய ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்களைக் கையாள்வதற்காக, முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு, இந்த புதிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் நடைபெறவுள்ள வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த (CUSMA) மீளாய்வுக்கு முன்னதாக, அமெரிக்கா தனது அழுத்தங்களை அதிகரித்து வரும் நிலையில், இந்தக் குழு தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான மூலோபாயங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பால் விநியோக முகாமைத்துவம் மற்றும் உருக்கு இரும்புத் துறை (Steel) மீதான அமெரிக்காவின் வரி விதிப்புகளை எதிர்கொள்வதற்காக, ‘நியூட்ரியன்’ (Nutrien) மற்றும் ‘ஆர்க்கெலர் மிட்டல்’ (ArcelorMittal) போன்ற பெரும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைப் பிரதமர் மார்க் கார்னி இக்குழுவில் இணைத்துள்ளார்.

அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அவசியமான முக்கிய தாதுப்பொருட்களைக் கனடா கொண்டுள்ளதால், அதனை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை நீக்க வைப்பதற்கு, இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.

கட்சிப் பாகுபாடின்றி தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் எரின் ஓடூல் மற்றும் முன்னாள் அமைச்சர் லிசா ரெய்ட் ஆகியோரும் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல்: PQக்கு நெருக்கடி நிலை!
அடுத்த செய்தி கியூபெக் சொகுசு விமான சர்ச்சை – வெளிவந்த உண்மை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வடக்கு லீஃப் ராப்பிட்ஸ் நகரை அச்சுறுத்தும் காட்டுத்தீ

ஜூலை 7, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் காணாம போன குழந்தை பாதுகாப்பாக மீட்ப்பு!

அக்டோபர் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

ப்ளூ ஹேக்கிள் மாஃபியா குழு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 4, 2025
கனடா

பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பில்லை – இந்திய மத்திய அரசு மறுப்பு..!!

பிப்ரவரி 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?