Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான யாழ் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்!

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இதனொரு அங்கமாக யாழ்ப்பாண நகர திட்டம் பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாநகர முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள் பலரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது செய்தி சேகரிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரால் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் ஆரம்பிக்க முன்னர் காணொளிகளைப் பதிவு செய்த நிலையில், கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்க முடியாது எனவும் கலந்துரையாடல் முடிந்த பின்னர் வருமாறும் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டது.

கலந்துரையாடல் தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றமை தொடர்பாக உத்தியோகத்தருக்கு தெளிவுபடுத்தப்பட்ட போதும் ஏனைய நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் இதில் இருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் அறையில் இருந்து வெளியேறினர்.

மாற்றம், வெளிப்படைத்தன்மை தொடர்பாக அதிகம் வலியுறுத்தப்படும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

முந்தைய செய்தி மொன்றியலில் REV துவிச்சக்கரவண்டி திட்டம் மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தம்.
அடுத்த செய்தி செம்மணி விவகாரத்தில் மரபனு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க பணிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது தாக்குதல்

மார்ச் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

40,000 ற்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு பிணை!

ஜூன் 4, 2025
இலங்கை

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?