Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி விவகாரத்தில் மரபனு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க பணிப்பு!

ஏப்ரல் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் பணித்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அத்துடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏழாவது பரிந்துரையில் மரபணு பரிசோதனை வெளிநாட்டில் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டதையும், இலங்கை நீதி அமைச்சர் கடந்த வருடம் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த போது, மரபணு பரிசோதனைக்கு உள்ளூரில் நிபுணர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மரபணு பரிசோதனை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் செய்ய முடியுமா? அவ்வாறு நிபுணர்கள் உள்ளனரா மற்றும் அது தொடர்பான விபரங்கள், வெளிநாட்டில் செய்வது என்றால் எந்த பல்கலைக்கழகங்களில் செய்ய முடியும் என்ற விடயத்தையும் எதிர்வரும் 27ம் திகதி அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு பணித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் மரபணு பரிசோதனை தொடர்பான ஆய்வுகளை வெளிநாட்டில் உள்ள அனுபவம் மற்றும் நற்பெயர் கொண்ட பல்கலைக்கழகங்களில் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

அதன்போது சட்ட வைத்திய அதிகாரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் மூலம் மரபணு பரிசோதனையை செய்ய முடியும் என தெரிவித்திருந்ததுடன்
அதனை மறுத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் புதிய இயந்திரத்தில் செய்யும் முதலாவது பரிசோதனையாக செம்மணி இருக்க முடியாது என வலியுறுத்தியதுடன் அதன் பின்னர் அது தொடர்பில் எழுத்து மூலமான சமர்ப்பணத்தையும் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான யாழ் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்!
அடுத்த செய்தி குறிகட்டுவான் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டு ஒந்தாட்சிமடம் கடற்கரையில் கரையொதுங்கிய இந்திய ரொக்கட்டின் பாகங்கள்

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்றார் பாப்பரசர் பிரான்சிஸ்….

மார்ச் 23, 2025
1
இலங்கை

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர்

மார்ச் 5, 2025
இலங்கை

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?