Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனேடிய விவசாயிகளுக்கு 3 பில்லியன் டொலர் வர்த்தக வாய்ப்பு அளிக்கின்றது சீனா

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் தலைமையில், மத்திய வங்கி ஆளுநர் டிப் மேக்லம் (Tiff Macklem) மற்றும் நாட்டின் முன்னணி வங்கித் தலைவர்களை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் தற்போது சீனாவுக்குப் பயணித்துள்ளனர்.

2030-ஆம் ஆண்டிற்குள் சீனாவிற்கான கனேடிய ஏற்றுமதியை 50 சதவீதம் அதிகரிக்கும் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக இந்த விஜயம் பார்க்கப்படுகிறது.கனடாவின் வரலாற்றில் ஒரு வர்த்தகக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பெரும் வங்கிகளின் தலைவர்கள் இணைந்து செல்வது இதுவே முதல் முறையாகும்.

சீனாவிலுள்ள மாபெரும் நிதிச் சந்தைகளில் கனேடிய வங்கிகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவதும், கனடாவில் சீன முதலீடுகளை அதிகரிப்பதும் இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக வரி மிரட்டல்களுக்கு மத்தியில், நாட்டின் மத்திய அரசானது, தனது பொருளாதார வளர்ச்சியில் ஒரு பக்கமாக மட்டும் சார்ந்திராமல், சீனாவைப் போன்ற பெரிய சந்தைகளுடன் உறவைப் புதுப்பிக்க விரும்புகிறது.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட சீன விஜயத்தின் போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கனேடியப் பொருட்களுக்குச் சீனா பெரும் சலுகைகளை வழங்கியுள்ளது.

கனேடியக் கனோலா(Canola) விதைகள் மீதான வரி 85 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  மேலும் லொப்ஸ்டர் (Lobster), நண்டு மற்றும் பட்டாணி மீதான கூடுதல் வரிகளையும் சீனா நீக்கியுள்ளது.இதன் மூலம் சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக வாய்ப்பு கனேடிய விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் யூத பொது வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு மூடப்படும் அபாயம்
அடுத்த செய்தி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற பெரிய வியாழன் திருப்பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு மாகாணங்களுக்குள்ளேயே நிலவும் வர்த்தகத் தடைகளே காரணம் – சர்வதேச நாணய நிதியம்

ஜனவரி 28, 2026
கனடா

கியூபெக்கில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது

செப்டம்பர் 2, 2025
கனடா

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவில் கலாச்சார முறிவு

நவம்பர் 24, 2025
கனடா

எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா பிரதமர் மார்க் கார்னி?

நவம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?