Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் தமிழ் அரசியல்வாதிகளே! உங்கள் பிரதேச இன, இழிவுபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுக்களை நிறுத்துமாறு கோரி கடுமையான கண்டனத்தை தெரிவித்து வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (23) பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பாராளுமன்றத்தில் மலையக மக்களை நாய்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசி அந்த மக்களை இழிவுப்படுத்தியதுடன், தொடர்ந்து வெறுப்பு தூண்டும் பேச்சுக்களை பேசிவருகின்றனர்.

இதனை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு இன்று திங்கட்கிழமை (23) காந்தி பூங்காவில் ஆர்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டனர்.

இதன்போது தமிழ் அரசியல்வாதிகளே இன வேறுபர்டுகள் பார்க்காதே, அவதூறு பேசாதே, அரசியல்வாதிகளே இன இழிவுபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுக்களை நிறுத்து. இன மதம் பாக்காதே, நாடாளுமன்னறத்தில் மக்கள் அபிவிருத்தி தொடர்பாக பேசு, மக்களின் பிரச்சனையை பேசு, போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்ட காரர்கள் கண்டன அறிக்கை வாசித்த பின்னர் அங்கிருந்து ஆர்பாட்டகார்கள் விலகி சென்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளே! உங்கள் பிரதேச, இன இழிபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுகளை உடன் நிறுத்துங்கள்.’ நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துகக்ள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும், இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.

மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்கக் வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும்.

எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி எரிபொருள் விலையேற்றம் மீனவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது – என்.எம்.ஆலம்
அடுத்த செய்தி ஒட்டகப்புலத்தில் 2 ஏக்கர் காணி விடுவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பலஸ்தீனிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

நவம்பர் 14, 2025
இலங்கை

விகாரையின் கிணற்றிலிருந்த வலம்புரி சங்கு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு தினம்

செப்டம்பர் 1, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இடுகாட்டை வாங்கிய தனியார்…

ஏப்ரல் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?