Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலையேற்றம் மீனவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது – என்.எம்.ஆலம்

மார்ச் 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

உலகளாவிய ரீதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது.

குறிப்பாக வடமாகாணத்தில் கரையோரங்களை அண்டிய மாவட்டங்களில் மீனவர்களைக் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (23) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் முகங்கொடுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாகவும், சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற போர் நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு, அதை கையாளுகின்ற வகையிலே அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை நாங்கள் சற்று ஆராய வேண்டியிருக்கின்றது.

குறிப்பாக உலகளாவிய ரீதியில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது.

குறிப்பாக வடமாகாணத்தை எடுத்துக்கொண்டால், கரையோரங்களை அண்டிய மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்கள் நேரடியாக மீனவர்களைக் கொண்ட வாழ்வாதாரத்தின் ஊடாக இயக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலத்தில் பல விஷயங்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். பொருளாதார நெருக்கடி, நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி, அதற்கு அப்பால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களும், அதற்கப்பால் ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு என்று தொடர்ச்சியாக மீனவர்கள் முகங்கொடுத்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் ஏராளம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு, அதற்கப்பால் இனி வருங்காலங்களில் ஏற்படப்போகின்ற பொருட்களுக்கான விலையேற்றங்கள் அல்லது அதற்கான கட்டுப்பாடுகளை எவ்வாறு இந்த மக்கள், வடபகுதியில் வாழுகின்ற மக்கள் எவ்வாறு முகங்கொடுக்க போகிறார்கள் என்ற அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் மீனவர்கள் மத்தியிலே இருக்கின்ற அச்ச நிலையை கருத்தில் கொண்டால், தற்போது மன்னார் மாவட்டத்திலும் சரி, வட மாகாணத்திலும் சரி, மண்ணெண்ணெய் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு அரசு நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலே பகிர்ந்தளிக்க கூடிய நடைமுறையாக QR என்ற நடைமுறையை பயன்படுத்துகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கிட்டத் தட்ட மன்னாரில் 3,500 பிளாஸ்டிக் படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வள்ளங்களும் இருக்கின்றன. அதற்கப்பால் ஒரு நாள் படகுகளாக 250 படகுகள் டீசலைப் பயன்படுத்துகின்ற படகுகள் காணப்படுகின்றன.

இதற்கான எரிபொருளை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்த போதிலும், தற்போது வரை இந்த மீனவர்களுக்கு அவ்வாறான நெருக்கடி நிலை பெரிதாக ஏற்படவில்லை. இருந்த போதிலும் இப்போது இருக்கின்ற நிலையிலே ஒரு படகுக்கான எரிபொருள் தேவையாக நாள் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40 லிட்டர் வரையிலான மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. அரை லிட்டர் உட்பட ஒரு லிட்டர் பெட்ரோல் வரை தேவை ஏற்படுகிறது.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் 25 லிட்டரும், பெட்ரோல் அரை லிட்டரும் நாள் ஒன்றுக்கான மீனவருக்கான பங்கீடாக வழங்கப்பட்ட போதிலும், அந்த எரிபொருள் கூட சில நேரங்களில் மீனவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.

எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். எதிர்வரும் காலங்களிலே அண்மையிலே நாங்கள் அமைச்சரவையை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகின்றார், மே மாத அளவில் முற்றுமுழுதாக எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்துகின்றார்.

முந்தைய செய்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டம் ஆரம்பம்!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இலங்கை பிரஜைக்கான அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனை ஹரோயின் போதை பொருளுடன் பெண் வியாபாரி ஒருவர் கைது

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?