சனிக்கிழமை கியூபெக்கின் ட்ராய்ஸ் ரிவியர்ல் பகுதியில் இரவு சுமார் 9:20 மணியளவில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டதாக கியூபெக் மாகாண காவல்துறை அதிகாலை 4 மணியளவில் ஆம்பர் எச்சரிக்கை ஒன்றை விடுத்து அறிவித்தது.
2 வயது மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது
இதன்படி டோனவின் மேக் என்ற இரண்டு வயது குழந்தையும், ஆர்ச்சர் லீ ஜென்சன் என்ற நான்கு வயது குழந்தையும் காணாமல் போனதாக சனிக்கிழமை இரவு காவல்துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சிறுவர்களை அவர்களின் தாயான 29 வயது லாரி க்ளூட்டியர் கடத்தியுள்ளதாக கியூபெக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை இரு குழந்தைகளும் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் நகரத்திற்கு அருகிலுள்ள பகுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
இதனையடுத்து ஆம்பர் எச்சரிக்கை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.
