Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நான்கு கனடியர்களை தூக்கிலிட்ட சீனா – வலுக்கும் கண்டனம்

மார்ச் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நான்கு கனடியர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவால் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொலைகள் மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்திற்கு முரணானவை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மரணதண்டனைகளைத் தவிர்ப்பதற்கான நானும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கடந்த மாதங்களில் தலையிட்டு சீனாவிடம் கருணை கோரியதாக அமைச்சர் மெலானி ஜோலி கூறினார்.

அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் அரசு அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக ஜோலி தெரிவித்தார். அதேவேளை கனடாவில் உள்ள சீனத் தூதரகம் சமீபத்திய மாதங்களில் சீனாவில் கனேடிய குடிமக்கள் தூக்கிலிடப்பட்டதை உறுதிப்படுத்தியது.

ஆனால் எத்தனை பேர் என்பதைக் கூற மறுத்துவிட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரணதண்டனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறியது.

சீனா எப்போதும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. தூக்கிலிடப்பட்ட கனடியர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய நடைமுறை வழங்கப்பட்டதாகவும் சீன த் தூதரகம் தெரிவித்துள்ளது.

வழக்குகளில் தொடர்புடைய கனேடிய பிரஜைகள் செய்த குற்றங்களின் உண்மைகள் தெளிவாக உள்ளன. சீன நீதித்துறை அதிகாரிகள் சட்டத்தின்படி வழக்குகளைக் கையாண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கனேடிய பிரஜைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை முழுமையாக உத்தரவாதம் செய்துள்ளனர் என்று அதன் தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் கனேடிய அரசாங்கத்தின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒட்டாவா சீனாவின் நீதி அமைப்பை சட்டபூர்வமானதாக கருத வேண்டும் என்று தூதரகம் கூறியது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் சீனாவின் நீதித்துறை இறையாண்மையை மதிக்கவும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தவும், சீனாவுடன் ஒரே திசையில் பணியாற்றவும், உறுதியான நடவடிக்கைகளுடன் சீனா-கனடா உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை கூட்டாக ஊக்குவிக்கவும் கனடா தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று – டொனால்ட் ட்ரம்ப்
அடுத்த செய்தி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
கனடாமுதன்மை செய்தி

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை

மார்ச் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

ஹைவே 11 மற்றும் 17-ஐ இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கட்டமைப்பாக அறிவிக்க கோரிக்கை

மார்ச் 18, 2026
கனடா

நிறுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?