அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தீவிரப்படுத்த இருநாட்டுத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்குப் புதிதாக 50 சதவீத வரியைச் சுமத்தவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அவருடன் பிரதமர் மார்க் கார்னி அவசரத் தொலைபேசி உரையாடலொன்றினை முன்னெடுத்திருந்தார்.
அந்த உரையாடலின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய 30 நாள் கெடுவுக்குள் தீர்வு காண்பதற்காக, இருதரப்புக் குழுக்களும் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவுள்ளன.
அத்துடன், அமெரிக்காவின் புதிய வரிகள் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் பட்சத்தில், கனடா அதற்கு எவ்வாறான பதிலடி கொடுக்கும் என்பது குறித்த அனைத்து சாத்தியமான தெரிவுகளையும் தனது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், இது குறித்து மாகாண முதலமைச்சர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார்.



