கியூபெக் மாகாணத்தின் பொதுத்தேர்தலில் தங்களின் கட்சி வெற்றி பெற்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கப்போவதாக பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சி வாக்குறுதியை அளித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கியூபெக் மாகாணத்தின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சி இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, கியூபெக் மாகாணத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 முதல் 20 சென்ட்கள் வரை அதிகரித்துள்ளது. மொன்றியல் போன்ற நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 177 சென்ட்களாக உயர்ந்துள்ளது.
இது குறித்துப் பேசிய பி.க்யூ (PQ) கட்சியின் எரிசக்தித் துறை விமர்சகர் பாஸ்கல் பாரடிஸ், கியூபெக் மக்கள் அண்டை மாகாணங்களை விட அதிக விலையைச் செலுத்த வேண்டியிருப்பது அநீதியானது; இதை மாற்ற எமது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணத்தில் ஆளும் சி.ஏ.க்யூ (CAQ) கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் வேட்பாளர்களும் மக்களுக்கான சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
