Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையமான Natanz தாக்கப்பட்டது

மார்ச் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது, ஈரானின் பிரதான அணுசக்தி நிலையமான நடன்ஸ் Natanz தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிற்கான ஈரானிய தூதுவர் ரெசா நஜாபி, திங்களன்று நடைபெற்ற 35 நாடுகளின் ஆளுநர்கள் குழு கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது ஈரானின் அமைதியான மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.”

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இராணுவ நடவடிக்கையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் சூழல் மிகவும் கவலைக்குரியது என்றும், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவர் ரஃபேல் குரோசி (Rafael Grossi) எச்சரித்துள்ளார்.

ஈரான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் அணு மின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி உலைகள் மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் அணுசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இந்த தாக்கதல்களால் கதிர்வீச்சு கசிவு ஏற்படக்கூடும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும், அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு பெரிய மாநகரத்தின் பரப்பளவு அல்லது அதற்கும் அதிகமான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானின் அண்டை நாடுகளில் இதுவரை கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்றாலும், பிராந்திய பாதுகாப்பு கண்காணிப்பு வலையமைப்பு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அணுசக்தி நிலையங்கள் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், இது அண்டை நாடுகளின் எல்லைகளையும் தாண்டி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி ட்ரம்பின் நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் – ரணில் தெரிவிப்பு!
அடுத்த செய்தி ஈரான் அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இதுவரையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 181 இந்திய மீனவர்கள் கைது!

ஜூலை 14, 2025
உலகம்

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்

மே 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டம்

மே 5, 2026
உலகம்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையில் சந்திப்பு!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?