தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றதையடுத்து யாழ்ப்பாணம் காக்கைதீவில் இன்று விஜய் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாடினர்.
இதன் போது வறிய மக்களுக்கு அரிசி பொதிகளும் விஜய் ஆதரவாளர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் மற்றும் பதாகைகளும் கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


