ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தில் வாழும் ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கித் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பல தசாப்தங்களாக ஈரான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் இந்தத் தாக்குதலைக் கொண்டாடினாலும், ஒரு தரப்பினர் அப்பாவி மக்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையடைந்துள்ளனர்.
மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டி ஆகிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான ஈரானியர்கள், இசை முழங்க நடனமாடித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ள நிலையில், இது ஈரானில் ‘புதிய விடியல்’ எனப் இந்த இரானியர்கள் முழக்கமிட்டனர்.
இதேவேளை, கியூபெக்கில் இடம்பெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்தியில், பல ஈரானியக் குடும்பங்கள் தங்கள் ஈரான் உறவினர்களின் நிலையை துயரப்படும் நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
