ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிதாக மூன்று தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கியூபா குடியரசின் புதிய தூதுவராக “பெட்ரிஸியா லஸாரா பேகோ குவேரா” (Patricia Lázara Pego Guerra), கட்டாரின் புதிய தூதுவராக ஹமட் மொஹமட் அப்துல்லா அல் – சனட் அல் – டொசரி (Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஸ்லோவேனியாவின் தூதுவராக தோமஸ் மென்சின் (Tomaz Mencin) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்ட புதிய தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் தங்களுடைய நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்திருந்ததுடன், தூதுவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான கலந்துரையாடலை மேற்க் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
