ஆசிரியர்களின் இடமாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளை வீணடிக்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப செயலாளர் காராளசிங்கம் பிரகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.




