Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து -பெண் உட்பட இருவர் பலி!

ஆகஸ்ட் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி! 13பேர் காயம்! பலரது நிலை கவலைக்கிடம்
வவுனியா

வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் சாவடைந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிபயணித்த பொலிரோ ரக வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பார ஊர்தியில் மோதி கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் இருவர் மரணமடைந்ததுடன் ஏனையோர் படுகாயமடைந்திருந்தனர்.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் சாவடைந்துள்ளதுடன் 13பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9பேர் பெண்கள் ஆறு பேர் சிறுவர்கள்.

உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33 ,சுயன் வயது30 என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

முந்தைய செய்தி யாஷ் தயாளுக்கு UPT20 தொடரில் விளையாடத் தடை!
அடுத்த செய்தி அமெரிக்காவின், புரூக்லின் பகுதியில் துப்பாக்க்கிசூடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 22, 2025
இலங்கை

வெற்று கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்.

பிப்ரவரி 14, 2025
இலங்கை

சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

செப்டம்பர் 6, 2025
இலங்கை

தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு தினம்

செப்டம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?