ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளுக்கு UPT20 தொடரில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் யாஷ் தயாள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டநிலையில், அவருக்குக் குறித்த தொடரில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, யாஷ் தயாள் தன்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக காசியாபாத் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 2 பெண்களால் அண்மையில் முறைப்பாடளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் யாஷ் தயாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ளதால், யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
