Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் – பா.உ ரவிகரன்

பிப்ரவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 13.02.2026 இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது பொலிசாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தோடு பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் எடுத்துச்செல்வதற்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்கதர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

எனவே இம்முறை சிவராத்திரி தினவழிபாடுகளுக்கு அவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது. சைவமக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான சைவமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டுமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இம்முறை தடைகளின்றி சுதந்திரமாக மக்கள் வழிபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருகின்ற அடியவர்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வவுனியா வடக்கு பிரதேசசபைத் தவிசாளருக்கு இதன்போது நாடாளமேன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஆன் மெக்ராத் எதிர்கொண்ட கோரச் சம்பவம்
அடுத்த செய்தி சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது!

ஜூலை 16, 2025
இலங்கை

வாகன இலக்கத் தகடு பிரச்சினைக்கு நவம்பர்க்குள் தீர்வு!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

இராணுவத்தை வெளியேற்றி உள்ளக விளையாட்டு அரங்கை அமையுங்கள்-யாழ் மாநகரசபையில் தீர்மானம்!

டிசம்பர் 17, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்.

பிப்ரவரி 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?