Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபய ராஜபக்ச இணையவழியாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு, பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், இணையவழித் தளம் ஊடாகச் சாட்சியமளிப்பதற்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு, தம்மால் யாழ்ப்பாண நீதிமன்றிற்கு நேரில் சமூகமளிக்க முடியாது என, கோட்டாபய ராஜபக்ச தரப்பால் முன்வைக்கப்பட்ட நீண்டகாலக் கோரிக்கையை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து சர்வதேச மனித உரிமைகள் தினப் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த லலித் மற்றும் குகன் ஆகியோர் மர்மமான முறையில் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களின் உறவினர்களால் தொடரப்பட்ட ஆட்கொணர்வு விசேட மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச, நீதிமன்றில் நேரில் முன்னிலையாகாமல் தொலைநிலைக் காணொளித் தொழில்நுட்பம் (Audiovisual/Online) மூலம் சாட்சியமளிப்பதாகச் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளது.

லலித் – குகன் கடத்தப்பட்ட காலகட்டத்தில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச, இவ்விவகாரத்தில் சாட்சியமளிக்க வேண்டுமென 2019 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முதன்முதலில் அழைப்பாணை (Summons) விடுத்திருந்தது.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணப் பிராந்தியத்திற்கு நேரில் பயணம் செய்வது தனது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனக் குறிப்பிட்டு, கோட்டாபய ராஜபக்ச, அந்த நீதிமன்றில் முன்னிலையாவதை தொடர்ந்து தவிர்த்து வந்திருந்தார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போதும், அதன் பின்னரும் கோட்டாபய ராஜபக்ச பலமுறை யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் நுவான் போபகே, பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வாதத்தை ஏற்கக் கூடாது என நீதிமன்றில் வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணைகள் நிறைவு
அடுத்த செய்தி கியூபெக்கிற்கான இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை அறிவித்தார் பிரதமர் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவு மாட்டத்தில் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கம்பளை பகுதியில் தொலைபேசி வர்த்தக நிலையத்தில் திருட்டு சம்பவம்!

ஆகஸ்ட் 30, 2025
இலங்கை

ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படைத் தளபதி தொடர்ந்தும் விளக்கமறியலில்!

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனை புனாணை வனவிலங்கு காரியாலயத்தில் திருட்டு

ஜனவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?