Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணைகள் நிறைவு

ஜூன் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிள்ளையான் என்று அழைக்கப்படுபவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான நீண்டகால விசாரணைகளை, இலங்கை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிறைவு செய்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலை விவகாரம் தொடர்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவராக உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் தடுத்து வைப்பு உத்தரவுகள் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான இறுதி வாதப்பிரதிவாதங்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனைத்து விசாரணைகளும் சுமுகமாக நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை பிறிதொரு நாளில் அறிவிப்பதாகப் பதிவு செய்துள்ளது.

இன்றைய விசாரணையின் போது, மனுதாரரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகளும் மற்றும் அரச தரப்பில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் தங்களின் இறுதிச் சமர்ப்பிப்புகளை நீதிமன்றில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கீரிமலையில் விசேட வழிப்பாட்டில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர்
அடுத்த செய்தி கோட்டாபய ராஜபக்ச இணையவழியாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளம்

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் மிதந்த யாழ் பருத்தித்துறை மரக்கறி சந்தை!

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஜூலை 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

ஆகஸ்ட் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?