Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது

மே 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வௌிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்கியமைக்காக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவிரல் அடையாளம் இன்றி கெஹெல்பத்தர பத்மேவின் கடவுச்சீட்டை குறித்த அதிகாரியே தயாரித்து வழங்கியிருக்கலாமென குற்றப்புலனாய்வு திணைக்களம் சந்தேகம் வௌியிட்டுள்ளது.

இந்த நிலையில் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரிக்க முயன்ற 2 சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவரும் கடவுச்சீட்டை தயாரிப்பதற்காக கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நிழற்படங்களை WhatsApp செயலி ஊடாக பெற்று அதனை வடிவமைத்து குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கெஹெல்பத்தர பத்மே 2014ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டு வௌிநாடு சென்றுள்ளார்.

அத்துடன் குறித்த கடவுச்சீட்டானது கடந்த வருடத்துடன்(2024) உடன் காலாவதியாகியுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர கெஹெல்பத்தர பத்மேவின் நிழற்படத்தை பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு பெயர்களில் மேலும் 2 போலி கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு….
அடுத்த செய்தி கொழும்பு கோட்டையில் இன்று கடும் வாகன நெரிசல்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சித்தர்களின் புனித பூமியில் குப்பை கொட்டுவது தொடர்பாக போராட்டம் முன்னெடுப்பு!

ஜூன் 9, 2025
1
இலங்கை

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிப்பு – ரவிகரன் எம்.பி

பிப்ரவரி 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

டிசம்பர் 26, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?