ஒட்டாவா நகரின் எதிர்காலக் கழிவு முகாமைத்துவச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கார்ப் சாலையில் (Carp Road) அமைந்துள்ள தனியார் கழிவு முகாமைத்துவ நிலத்தை (Landfill) விலைக்கு வாங்க, ஒட்டாவா மாநகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஒட்டாவா மாநகரத்திற்குச் சொந்தமான தற்போதைய ‘ட்ரெயில் ரோடு’ (Trail Road) கழிவு நிலம் இன்னும் 10 ஆண்டுகளில் முழுமையாக நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ‘வேஸ்ட் மேனேஜ்மென்ட்’ (Waste Management) என்ற தனியார் நிறுவனத்திடம் இருக்கும் இந்த நிலத்தை மாநகரம் வாங்குவதன் மூலம், எதிர்காலத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்குப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தனியார் நிலங்களில் குப்பைகளைக் கொட்ட வழங்கப்படும் பெரும் தொகையை (Tipping fees) இதன் மூலம் மிச்சப்படுத்த முடியும் என அதிகாரிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
