நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 30,386 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தேடுதல் வேட்டையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 467 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 72 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 268 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 184 பேரும் கைதாகியுள்ளனர்.
மேலும் போக்குவரத்து குற்றங்களுக்காக 4,584 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
