Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

ஜனவரி 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று புதன்கிழமை(29) உத்தரவிட்டார்.

மேலும் இன்றைய தினம் புதன் கிழமை(29) கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேக நபரை நாளை வியாழக்கிழமை 30 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும் இன்றைய தினம் புதன்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தின் மூடிய அறைக்குள் தனித்தனியாக அடையாள ஆள் அணிவகுப்பு இடம்பெற்றது.

இந்த நிலையிலே ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்களாக 5 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர்.

குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை(29) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி பூதன்வயல் பாடசாலையின் சிக்கல்நிலமைகள் குறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி!
அடுத்த செய்தி மட்டக்களப்பில் சிறுமி கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

2026க்கான பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியீடு!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நினைவேந்தல் தொடர்பில் வெளியான துண்டுபிரசுரம்

செப்டம்பர் 26, 2025
இலங்கை

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விசாரணை அறிக்கை வவுனியா ஊடகவியலாளர்களால் விநியோகம்!

செப்டம்பர் 10, 2025
இலங்கை

தொடரும் மண்சரிவு அபாயம்- பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய மக்கள்!

நவம்பர் 25, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?