மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பஸ் வண்டியில் தனியாக சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை நேற்று புதன்கிழமை (28) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ளதுடன் தந்தையின் பராமரிப்பில் இருந்துவந்த குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று இரவு (11) வீட்டை விட்டு வெளியேறி கல்முனையில் இருந்து பொலன்னறுவைக்கு பிரயாணித்த தனியார் பஸ்வண்டியில் ஏறியுள்ளார்.
குறித்த பஸ்வண்டியில் பிரயாணித்த நோயாளி ஒருவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் பஸ்வண்டியை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு சாரதி கொண்டு சென்றுள்ளார் இந்த நிலையில் தனியாக பிரயாணித்த சிறுமி மீது அங்கிருந்த ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் குறித்த பஸ்வண்டியில் பிரயாணித்த சிறுமியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணையின் போது ஏற்கனவே குறித்த சிறுமி இவ்வாற வீட்டை விட்டு வெளியேறிய இவரை சிறுவர் இல்லத்தில் அனுமதித்தனர் பின்னர் தந்தையர் தான் பராமரிப்பதாக பொறுப்பேற்று அவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளதாகவும் அண்மையில் புத்தளத்திலுள்ள அவரின் மாமியார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளதாகவும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்று வருவதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து குறித்த சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்காக நீதிமன்றில் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.