ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம சந்தியில் விபத்தொன்று சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் லொறியும் வேனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலும்குறிப்பிடுகையில்,
ஹட்டனில் இருந்து குடகம நோக்கிச் சென்ற லொறி பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாக திரும்பி குறுகிய வீதி ஒன்றுக்கு நுழைய முற்பட்ட போது டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன, மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
