கடந்த 2021-ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் 15 வயது சிறுமியான மெரியம் பௌண்டாவி (Meriem Boundaoui) சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான ஜூரி விசாரணை தொடங்கியது.
இந்தக் கொலை தொடர்பாக சலீம் துவைபி மற்றும் அய்மானே புவாடி ஆகிய இருவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் மற்றும் நான்கு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீதிபதி இவான் பவுலின் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணை சுமார் 12 வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிகையலங்கார நிலையம் (Barber shop) மற்றும் ஒரு மளிகைக் கடைக்கு இடையே இருந்த வாகன நிறுத்துமிடத் தகராறு காரணமாகவே இக்கொலை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
