Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்

ஜனவரி 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியா பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனம்(incubation center) ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.முகமட் நவாவி தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சானது, இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றது.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அங்கு கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அவர்களுடைய கற்கைநெறிகளோடு நிறைவு பெறுவதை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக நாட்டின் அபிவிருத்திக்கு ஆராய்ச்சிகள் முக்கியமானதாக காணப்படுகின்றது. அவை வணிகமயமாகும் போதே நாட்டின் அபிவிருத்திக்கு அது பங்களிப்பு வழங்கும். அதற்கான வாய்ப்புக்கள் இலங்கையில் மிகவும் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக ஆராய்ச்சி மூலமாக பெறப்பட்ட முடிவுகளை அபிவிருத்திக்கு பயன்படுத்தவதனை நோக்காககொண்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் ஆராய்ச்சியாளர்களுக்கும், அவற்றை பயன்படுத்துகின்ற தொழில் முனைவோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு “வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்குகின்ற நிறுவனங்களை”(incubation center) பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பதற்கான ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது.

அந்தவகையில் இலங்கையில் வவுனியா பல்கலைக்கழகம், கிழக்குபல்கலைகழகம், ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவ்வாறான மூன்று மையங்களை அமைச்சுடன் இணைந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து அதனை மக்கள் மயப்படுத்துவதற்கான ஏற்ப்பாடுகளை செய்துள்ளோம்.

எனவே எதிர்வரும் 23 ஆம் திகதி வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வளாககட்டடத்தில் இவ்வாறான மையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து அமைச்சுக்களினதும் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளோம். அந்தவகையில் முதலாவது பல்கலைக்கழத்தோடு இணைந்த வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்கும் மையத்தை வவுனியாவில் ஆரம்பிக்கப்போகின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் என்றார்.

முந்தைய செய்தி மொன்றியல் துறைமுக திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய சுற்றுச்சூழல்
அடுத்த செய்தி கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

25 ஆயிரம் நிதியுதவி தரவில்லை கிராம சேவையாளர் மீது 16 வயதான மாணவன் முறைப்பாடு!!

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

டிராகன் பழத்தில் உள்ள மகத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள் !

மார்ச் 24, 2025
இலங்கை

யாழில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

ஜனவரி 10, 2026
இலங்கை

நல்லூர் சிவன் கோவிலில் புட்டு திருவிழா!

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?