ஒட்டாவா நகர சபையின் (City Council) 2026 ஆம் ஆண்டுக்கான மாகாண வரவு செலவுத் திட்டத்தின் (Draft Budget) மீதான இறுதி வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், மாகாண சபை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்துமுரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதா அல்லது அத்தியாவசிய நகர சேவைகளில் முதலீடு செய்வதா என்பதை ஒட்டியே, இந்த கருத்துமுரண்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 5 பில்லியன் டொலர் செயல்பாட்டு செலவு மற்றும் 1.7 பில்லியன் டொலர் மூலதனச் செலவு முதலானவற்றைக் கொண்ட இந்த வரவு செலவுத் திட்டம், சராசரி வீட்டு உரிமையாளர்களுக்கு 3.75 சதவீத வரி அதிகரிப்பை முன்மொழிகிறது.
இதேவேளை, இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், வரவு செலவுத் திட்டத்தின் வரைவு ஆவணத்தின்படி, பல முக்கிய விடயங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
