Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இளைஞனுக்கு “கசிப்பு சிக்” சிறைச்சாலை நிர்வாகம் கண்டு பிடித்த புதுவகையான நோய்(Video)

டிசம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவரது சகோதரியை , யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்லாத குற்றத்திற்காக  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில்  யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்க மறியலில்  தடுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் ,தலையில் காயம் ஏற்பட்டு தற்போது கடந்த 11ஆம் திகதி முதல் கோமா நிலையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் குறித்த இளைஞனின் சகோதரி ஊடக சந்திப்பில், அண்ணாவை கடந்த 08ஆம் திகதி வைத்திய சாலையில் சென்று பார்த்த போது “அடித்து போட்டாங்கள் ” என தன்னிடம் சொன்னார் என கூறி இருந்தார்.
அந்நிலையில் , தாம் அடிக்கவில்லை. சிறையில் தடுக்கி விழுந்தார் என தெரிவித்த யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் . இளைஞனின் சகோதரி உண்மைக்கு புறமான தகவலை தெரிவித்தார் என பெண்ணிற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சுமார் இரண்டரை மணி நேரமாக விசாரணைகளை முன்னெடுத்து  வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை , குறித்த இளைஞன் ஊரில் நடைபெற்ற கைக்கலப்பு தொடர்பான வழக்கு விசாரணையையே எதிர்கொண்டு வரும் நிலையில் , சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்ததாக சில ஊடகங்களில் இளைஞனுக்கு கசிப்பு வழக்கு உண்டு என்றும் , இளைஞனுக்கு “கசிப்பு சிக்” என சிறைச்சாலை நிர்வாகம் கண்டு பிடித்த புதுவகையான நோய் தொடர்பில் வெளியான செய்திகளால் இளைஞனின் குடும்பம் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
முந்தைய செய்தி ஒட்டாவா மாகாண சபை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடு!
அடுத்த செய்தி தற்காலிக ஒப்பந்தத்தை முன்வைத்த முன்னணி விமான சேவை ஏர் ட்ரான்சாட்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் . மாவட்ட பிரதேச செயலங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.

மார்ச் 3, 2025
இலங்கை

தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் விமர்சிப்பது எங்களுக்கு கவலை இல்லை-திஸ்ஸ அத்தநாயக்க!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுன்னாகம் பகுதியில் தடம் புரண்ட டிப்பர் வாகனம் – சாரதி கைது

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?