கனடாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்பொழுதையும் விட மோசமடைந்துள்ளன.
காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் வாக்களிப்புகளில் கனடாவின் நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஆகியவை இந்த விரிசலுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
மார்க் கார்னியின் கனடிய அரசு ஜூன் 12 அன்று காசா மீதான இஸ்ரேலின் போர் தொடர்பாக எடுத்த கடுமையான நிலைப்பாடு, இஸ்ரேலுடன் இருந்த பிளவை மேலும் அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு தீர்மானத்திற்கு கனடா வாக்களித்ததன் மூலம் இது தெளிவாகத் தெரிந்தது.
முன்னதாக, ஜஸ்டின் ட்ரூடோ தலைமை வகித்த கனேடிய அரசு இதேபோன்ற தீர்மானத்தில் நடுநிலை வகித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தற்போது இஸ்ரேலுக்கு எதிராக கனடா விதித்த தடைகள் குறித்து, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆக்ரோஷமாக பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.