பாணந்துறை, வலான வீதி பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் ஒன்றில் காயமடைந்த இளைஞர் பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பண விடயத்தில் ஏற்பட்ட தகராறினால் குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம் பாணந்துறை வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


