Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கு

டிசம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மண்டைதீவு புதைகுழி தொடர்பிலான விசாரணை அறிக்கையை கையெழுத்து பிரதியாக வழங்காது, தட்டச்சு பிரதியாக வழங்குமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அறிவுறுத்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து சான்று ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு , நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, பொலிஸாரினால் , அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர், மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் பொலிஸார் சமர்ப்பித்தனர்.

அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக நாளைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
அடுத்த செய்தி Eye Foundation நிவாரண பணி கட்டுமுறிப்பு மக்களுக்கு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்!

ஜூலை 17, 2025
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது தொடர்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை!

ஆகஸ்ட் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு

ஜூலை 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?