மட்டக்களப்பு வாகரையில் அமைந்துள்ள எல்லை கிராமமான கட்டுமுறிப்பு கிராம மக்களுக்கு டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Eye Foundation இன் அனுசரணையில் கரிட்டாஸ் எகைட் நிறுவனம் இணைந்து அப்பகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் வசிக்கும் 248 குடும்பங்களிற்கு சுமார் 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளே இன்று வழங்கிவைக்கப்பட்டது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பெரும் கடினப்பட்டு சேர்த்த சொத்துக்களையும் இழந்து, வீதிகள் உடைந்து அனைத்தும் தலைகீழாக மாறி நிர்க்கதியாகியுள்ள எம்மவர்களுக்காக உதவும் ஒவ்வொரு கரங்களுக்கும் எமது நன்றிகள்.
