செட்டிக்குளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பில் சபை தவிசாளர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா, செட்டிக்குளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் செட்டிக்குளம் பிரதேச சபையின் சபை கூட்டத்தில் முன்மொழியப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் 18 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் சபைக்கு சமுகமளிக்க முடியாத காரணத்தால் வராத பட்சத்திலும் அவருடைய சம்மதமும் இதில் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே எமது பிரதேச சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதற்காக எங்களது அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சி சார்ந்த கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்சறிகள். தொடர்ந்தும் எங்களது செட்டிக்குளம் பிரதேச சபை பட்ஜெட் எப்படி 18 பேரும் ஒற்றுமையுடன் அதை நிறைவேற்றினார்களோ அதேபோன்று எல்லோரும் செட்டிகுளம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைப்போம் எனத் தெரிவித்தார்.
