Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

ராமேஸ்வரம் கடற்கரையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா மீட்பு!

ஜூன் 8, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய தனிப்பிரிவு பொலிஸார் குழுவாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை தனிப்பிரிவு பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அவ்வாறு நின்றுக்கொண்டிருந்த காரில் இருந்து ஒருவர் பெரிய பை ஒன்றை எடுத்து நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரைக்கு கொண்டு சென்றதையடுத்து பொலிஸார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது காரில் மேலும் இருவர் இருந்தது தெரியவந்ததையடுத்து காரை சோதனை செய்த வேளை காரில் கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, காரில் இருந்த மூவரையும் பொலிஸார் கைது செய்ததோடு , கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் என்பவற்றை பொலிஸார் மீட்டு அவர்களை மேலதிக விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

 

முந்தைய செய்தி காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவை மீண்டும் ஆரம்பம்!
அடுத்த செய்தி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயம் !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேர் திருவிழாவில் வெடித்த பட்டாசு ஒருவர் பலி!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளார்

ஜூன் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆயிரத்தை நெருங்கிய தேர்தல் விதி மீறல்கள் ….

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?