Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட நபருக்கு விளக்கமறியல்

ஜூலை 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடொன்றில் அத்துமீறி உள் நுழைந்து, தனிமையிலிருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை புரோக்கரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை(25) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் திருமண புரோக்கர் ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி முடித்துவைத்து அதற்கான தரகு பணத்தை பெண் மற்றம் மாப்பிளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.

இந் நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையிலிருந்து வந்துள்ள நிலையில் வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக உட் சென்று வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

திருமண புரோக்கரின் செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில் குறித்த திருமண புரோக்கர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) மதியம், பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண புரோக்கரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி!
அடுத்த செய்தி வலிகாம கிழக்கில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மார்ச் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். புகையிரத விபத்து – ஆலய குருக்கள் உயிரிழப்பு!

ஜூலை 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் கிளின் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம்

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?