டொரண்டோ நகரில் 3 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள வீடுகளை வாங்குபவர்கள் மீது விதிக்கப்படும் பெருநகரக் காணி மாற்ற வரியை, கணிசமாக உயர்த்துவதற்கு, மேயர் ஒலீவியா சோ (Olivia Chow) திட்ட முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.
டொரண்டோ நகரின் அத்தியாவசிய சேவைகளுக்கு நிதியளித்து, சாதாரண குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதே இந்த வரி உயர்வின் முதன்மை நோக்கமாகும்.
அடுத்த வாரம் நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்குச் செல்லவுள்ள இந்தத் திட்டம், அதி உயர் மதிப்பு கொண்ட வீடுகளுக்கான வரியை 0.9 முதல் 1.1 சதவீதம் வரை அதிகரிக்கக் கோருகிறது.
இந்த வரி உயர்வானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி அதிகரிப்பின் மூலம், 2026 ஆம் ஆண்டில் மேலதிகமாக 13.8 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்ட முடியும் என டொரண்டோ மேயர் சோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
