கனகாவின் பிரதமர் மார்க் கார்னி, அக்டோபர் 24 ஆம் திகதி முதல் நவம்பர் 1 ஆம் திகதி வரை மலேஷியா, சிங்கப்பூர், மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளார்.
கனடாவுக்கும் பிறநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வளர்க்கவும், பாதுகாப்பு பங்களிப்புகளை பலப்படுத்தவும் இந்த பயணம் உதவும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவைத் தவிர்த்த மற்ற நாடுகளுக்கு கனடாவின் ஏற்றுமதியை இருமடங்காக உயர்த்துவதே பிரதமரின் பயணத்தின் பிரதான இலக்கு என்று கூறப்படுகின்றது.
மலேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) உச்சி மாநாட்டில் அவர் முதலில் கலந்து கொள்ளவுள்ளார்.
690 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்த 10 நாடுகளின் கூட்டமைப்புடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில்
ஈடுபடுவதற்கு பிரதமர் மார்க் கார்னி முனைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.