மொன்றியல் நகர எல்லைக்குள் உள்ள மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் (Borough), வீடற்ற மக்கள் தங்கியிருந்த ஒரு தற்காலிக முகாமை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியமை குறித்து, உள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, “நடந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான தவறான புரிதல்” என்று வட்டார மேயர் கிறிஸ்டின் பிளாக் (Christine Black) விளக்கம் அளித்துள்ளார்.
வீடற்ற முகாம்களை நீக்கும் நடைமுறையை நிறுத்துவதாக புதிய நிர்வாகம் அளித்திருந்த வாக்குறுதிக்கு இது முற்றிலும் முரணாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேயர் கிறிஸ்டின் பிளாக் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் துப்புரவுப் பணியாகவே (clean-up operation) கருதப்பட்டது என்றும், மக்கள் தங்கியிருப்பதால் குவிந்திருந்த குப்பைகள் அனைவருக்கும் அபாயகரமானதாக மாறியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


