கியூபெக்கின் மாகாணத்தின் சயிண்ட் ரொஸ் டி வாட்போட் நகரில் நேற்றையதினம் காலை 8.30 மணியளவில் பாடசாலை பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த 17 பேரில் 4 பேர் கடுமையான காயமடைந்துள்ளதுடன், பேருந்தின் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தொடர்பான விசாரணையினை மேற்க் கொண்ட நிலையில், பேருந்து சென்ற பாதை பனிப்படர்ந்து காட்டப்பட்டதால இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
