அமெரிக்காவின் வரிவிதிப்பு சார் விடயங்கள் குறித்த அமைச்சரவைக் கலந்துரையாடலுக்காக, கனேடிய பிரதமர் Mark
Carney தமது தேர்தல் பிரசாரத்தை இன்று சிறிதுநேரம் இடைநிறுத்தியுள்ளார்.
கனேடிய – அமெரிக்க உறவுகள் பேரவை மற்றும் கனேடிய அமைச்சரவை ஆகியவற்றுடன் அவர் தமது கலந்துரையாடலை
நிகழ்த்தியுள்ளார். குறித்த கலந்துரையாடல்களில் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர் மார்க் கார்னி ட்ரம்பின் வரிவிதிப்புகளோடு கனடா ஒரு நோக்கத்துடனும் முழு பலத்துடனும் போராடும் என தெரிவித்துள்ளார்.