சஸ்காச்சுவான் மாகாணம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் நியாயமான ஊதியம் மற்றும் அதிக மரியாதையைக் கேட்டு, புதன்கிழமை சஸ்காச்சுவான் சட்டமன்றம் முன்பாக, திரண்டனர்.
CUPE 5430 என்ற தொழிற்சங்க அமைப்பின் உறுப்பினர்களான இந்த பணியாளர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஊதிய ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்பதாலும், கடந்த மூன்று வருடங்களாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்பதாலும், பல சுகாதாரப் பணியாளர்கள் அதிக வேலைச்சுமை மற்றும் ஊழியர் பற்றாக்குறையால் சிரமப்படுகிறார்கள்.
சஸ்காச்சுவான் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளில் உள்ள 14,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை CUPE 5430 பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் முக்கியமான பணிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அவர்கள் போராடியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
